திருப்பதியில் மிகப்பெரிய சாலைக்கு ஸ்ரீ சந்திரசேகரர் பெயர்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2023 11:05
திருப்பதி: திருப்பதியில் விஜய யாத்திரை செய்து வரும், விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். இன்று நடைபெற்ற விழாவில் திருப்பதியில் மிகவும் பிரதானமான மிகப்பெரிய சாலைக்கு ஸ்ரீ சந்திரசேகரர ரோடு என்று பெயர் வைத்து அதை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் இன்று காலை திறந்து வைத்தார்கள். விழாவில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.