பதிவு செய்த நாள்
10
மே
2023
09:05
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் 4ம் தேதி, சித்திரை பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, இரவு, சுவாமிக்கு உற்சவம் நடைபெற்று, வீதியுலா செல்கிறார். ஐந்தாம் நாள் உற்சவமாக, நேற்று முன்தினம் காலை, வழிபாட்டைத் தொடர்ந்து, பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்தில், வீதியுலா சென்றார். மாலை, திருமஞ்சனம் நடைபெற்று, இரவு ஊஞ்சல் சேவையாற்றினார். தொடர்ந்து, சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்றார். பக்தர்கள் வழிபட்டனர். நாளை, திருத்தேரில் சுவாமி வீதியுலா, வரும் 13ம் தேதி தெப்போற்சவம் நடக்கிறது.