காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள உய்யக்கொண்டான் சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயில் சித்திரை தேர்த் திருவிழா நடந்தது. கடந்த வாரம் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடந்து, புரவி எடுப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நடந்தது. நேற்று காலை திருத்தேருக்கு அம்பாள் எழுந்தருளினார். மாலையில் மதுக்குடமும், தேரோட்ட நிகழ்ச்சியும் நடந்தது. இன்று இரவு தீர்த்த வாரி நிகழ்ச்சியும் தொடர்ந்து அம்பாள் பூட்பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.