Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜம்மு ஏழுமலையான் கோவில் ஜூன் 8ல் மகா ... மகா முத்துமாரியம்மன் கோயில் விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம் மகா முத்துமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேதார்நாத்தில் பனிப்பொழிவு: யாத்திரிகர்களுக்கு எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
கேதார்நாத்தில் பனிப்பொழிவு: யாத்திரிகர்களுக்கு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்

10 மே
2023
10:05

டேராடூன்: கேதார்நாத்தில் மீண்டும் கடும் பனிப்பொழிவு இருப்பதால், யாத்திரை வரும் பக்தர்கள், வானிலை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப யாத்திரையை திட்டமிடுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பிரபல கேதார்நாத் புனித தலம் அமைந்துள்ளது. இந்த சிவன் கோவிலுக்கு புனித யாத்திரை துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக மே 15 வரை, பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமோலி மற்றும் ருத்ரபிரயாக் மாவட்டங்களில், மீண்டும் கடும் பனிப்பொழிவு இருப்பதால், கேதார்நாத் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது தொடர்பாக ருத்ரபிரயாக் எஸ்.பி., விஷாகா அசோக் பதானே நேற்று கூறியதாவது: கேதார்நாத்தில் நேற்று மீண்டும் கடும் பனிப்பொழிவு இருக்கிறது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் வானிலை நிலவரத்தை அறிந்து தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். பக்தர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோல் சமோலி மாவட்டத்தில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான ஹேம்குந்த் சாஹிப்புக்கு யாத்திரை செல்வது கடந்த 2ல் துவங்கியது. இங்கும் பனிப்பொழிவு இருப்பதால், பக்தர்களின் வசதிக்காக பனிக்கட்டிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar