சூலூர்: பட்டணம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி, பக்தர்கள் பூவோடு, தீர்த்தக்குடங்கள் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
சூலூர் அடுத்த பட்டணம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த, 25 ம்தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். இன்று சக்தி கரகம் எடுத்தல், பூவோடு மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கோவில் மிராசுதாரர்கள், விழா குழு நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.