அலங்காநல்லூர்: மதுரை அருகே அதலையில் ராமலிங்க சுவாமி சமாதி மடம் உள்ளது. இங்கு சுவாமி குருபூஜை விழா சித்தர்கள் வழிபாட்டுடன் 2 நாட்கள் நடந்தது. அய்யனார் கோயிலில் இருந்து பக்தர்கள் அலகுகுத்தி, பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பெண்கள் கோயில் மரத்தில் வேண்டுதல் பொம்மைகள் வைத்தும், தொட்டில் கட்டியும் வழிபட்டனர். சித்தர்கள், அடியார்கள் உணவு சாப்பிட்ட இலையை நேர்த்திக் கடனுக்காக பக்தர்கள், பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்தனர். நெல், அரிசி,புளி, காய்கறி உள்ளிட்ட விளை பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.