களைகட்டிய கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா; அலைமோதும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2023 03:05
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் தினமும் கூட்டம் களைகட்டுகிறது. கோயில் வளாக பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 9ல் துவங்கி நடந்து வருகிறது. மே 12 தேரோட்டம் நடந்தது. நேற்று தேர் தெற்கு ரத வீதியில் வடம் பிடித்து இழுத்து வரப்பட்டது. இன்றும் தெற்குரதவீதியில் மண்டகபடிதாரர்களால் தேர் இழுக்கப்படுதகிறது. நாளை தேர்நிலைக்கு வருகிறது. தொடர்ந்து கம்பம் நிலைபெயர்த்தல், சக்தி கொடுத்தல் நிகழ்வுகள் நடக்கிறது. தேனி மாவட்டத்ததை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட பக்தர்களும் அதிக அளவில் வருகை தருவதால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. போலீசார் ஆற்றங்கரை, ராட்டின மைதானம், தெற்கு, வடக்கு பஸ் ஸ்டாண்டுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுவாமி தரிசனத்திற்கு செல்வதற்கு, வெளியேறுவதற்கும் பல்வேறு வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் சுவாமி தரிசனத்திற்கு 20 நிமிடங்கள் ஆகிறது.