சூலூர்: பள்ளபாளையம் காமாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது.
சூலூர் அடுத்த பள்ளபாளையத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் பழமையானது. இங்கு சித்திரை திருவிழாவை ஒட்டி, திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வர சுவாமிக்கு நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள், பழங்கள், பூக்கள், வஸ்திரங்கள் உள்ளிட்ட சீர் வரிசை தட்டுகள் கொண்டு வந்து தெய்வங்களுக்கு சமர்ப்பித்து வழிபட்டனர். நேற்று நொய்யல் ஆற்றில் இருந்து அம்மை அழைத்தல் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சப்பரங்களில் வலம் வந்த தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்டன் செலுத்தினர். தொடர்ந்து மாவிளக்கு பூஜையும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.