திருவட்டார்; திருவட்டார் ஆஞ்சனேய சுவாமி கோவிலில் வரும் 20ம் தேதி மஹா ஆஞ்சனேய சனீஸ்வர ஹோமம் மற்றும் 108 சன்னியாசிகளின் மகா சங்கமம் நடக்கிறது. நிகழ்ச்சியை ஒட்டி காலை 9 மணிக்கு குழந்தைகள் நலனுக்காகவும், ஆன்மிகத்தில் குழந்தை கள் ஈடுபாடு கொள்ளவும், பாரம்பரியத்தைக் காக்கவும் தவத்திரு ஆஞ்சனேய சித்தர் சுவாமிகளால் மஹா ஆஞ்சனேய சனீஸ்வர ஹோமம் நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதன் மூலம் குழந்தைகளின் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். கல்வி கற்க ஆர்வம் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆக்கபூர்வமான சிந்தைகள் தோன்றும் என சித்தர் சுவாமிகள் தெரிவித்தார். ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் 94897 82882, 98948 40941 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர். அன்று மாலை 4 மணிக்கு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலந்து கொள்ளும் 108 சன்னியாசிகள், திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி திருக்கோவிலின் 48-வது மடாதிபதி மூப்பில் சுவாமியார் ஸ்ரீபுஷ்பாஞ்சலி சுவாமிகள் மற்றும் அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீராமநாத சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் பக்தர்களுக்கு அருள் ஆசிவழங்கி, மஹா ஆஞ்சனேய சுவாமி ஆலயகட்டுமான பணிகளையும் பார்வையிடுகின்றனர்.