நடுவீரப்பட்டு, : சி.என்.பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் அடிவாரத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் வரும் ஜூன் 9ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது. விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை 4:00 மணிக்கு திரவுபதியம்மன் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 8:00 மணிக்கு கெடிலம் ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து வந்து, இரவு 9:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று முதல் தினமும் மகாபாராத சொற்பொழிவு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.