கோடை விடுமுறையில் குவிந்த பக்தர்கள்: திருப்பதியில் 30 மணிநேரம் காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2023 01:05
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் திருமலைக்கு வருவது வழக்கம். கோடை விடுமுறை துவங்கிவிட்ட நிலையில், ஏழுமலையான் தரிசனத்திற்கு பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது.
கோடை விடுமுறை துவங்கிய பின், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று திருப்பதியில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 30 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 300 ரூபாய் தரிசனத்திற்கும் 7மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட இருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.