சதுரகிரியில் வைகாசி அமாவாசை வழிபாடு; குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2023 01:05
ஸ்ரீவில்லிபுத்தூர்; வைகாசி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்காக மே.17 முதல் மே.20 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று (மே 19) அமாவாசை வழிபாட்டிற்காக காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டுமென கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.