மேலுார்: மேலுார் துரோபதையம்மன் கோயில் வைகாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து பூக்குழி இறங்கும் பக்தர்கள் காப்பு கட்டினர். மே 26 பால்குடம், திருக்கல்யாணம், அம்மன் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். மே 31 பீமன் கீசன் வேடமும், ஜூன் 6 சக்கர வியூக கோட்டையும், ஜூன் 9 அர்ச்சுணன் தவசு, ஜூன் 11 கூந்தல் விரிப்பு, ஜூன் 12 கூந்தல் முடிப்பு, ஜூன் 13 பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து சிம்மவாகனத்தில் அம்மன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஜூன் 14 மஞ்சள் நீராட்டுன் திருவிழா நிறைவு பெறுகிறது.