தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2023 05:05
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயில் 101ம் ஆண்டு வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி சுவாமிக்கு விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. ஜூன்.,2 காலை 6:00 மணிமுதல் வாடிப்பட்டி மவுனகுருசாமி மடத்திலிருந்து பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம், பூக்குழி இறங்கி வந்து சுவாமிக்கு பாலபிஷேகம் நடக்கும், ஜூன் 3 மாலை 6:00 மணிக்கு சுவாமி கோயிலில் இருந்து முளைப்பாரி சீர்வரிசியுடன் பட்டு பல்லக்கும், ஜூன் 4 பூப்பல்லக்கும் நடக்கிறது. ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள், சீர்பாதம் தாங்கிகள், கிராமமக்கள் செய்து வருகின்றனர்.