Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி சட்டநாதர் கோவிலில் ... ருத்ரபிரயாக் ஸ்ரீகார்த்திகேய சுவாமி கோவிலில் கந்த யாஹ பெருவிழா ருத்ரபிரயாக் ஸ்ரீகார்த்திகேய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்!
எழுத்தின் அளவு:
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்!

பதிவு செய்த நாள்

20 மே
2023
10:05

ராமாவதாரம் முடிந்து கிருஷ்ணாவதாரம் நடக்கும் துவாபரயுகம்! சஞ்சீவி மலையை கொண்டு வந்து அமரர்குலம் காத்த சிரஞ்சீவி ஆஞ்சநேயர் ஸ்ரீராமபிரானின் திருநாமத்தை ஜபித்தவாறு வாழ்ந்து வந்தார். வாயுகுமாரனான ஆஞ்சநேயர், சிவபெருமானின் அம்சம் ஆவார். சூரிய குமாரனான சனியோ, சிவபெருமானிடம் சனீஸ்வரன் என்று ஈஸ்வர பட்டத்தைப் பெற்றவர். ஆஞ்சநேயர் மார்கழி திங்கள் மதிமறைந்த நந்நாள் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். ஜோதிட சாஸ்திரப்படி தனுர்ராசியில் சூரியனும், சந்திரனும் இருக்கின்ற சுபவேளையில் ஆஞ்சநேயர் அவதாரம் பண்ணினார். ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவராதலால் சனிபகவான் 7 1/2 ஆண்டு காலம் அவரைப் பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் சனிபகவான்! ஆஞ்சநேயர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ராமநாமத்தை ஜபிப்பதும், ஸ்ரீராமரை மலர் கொண்டு ஆராதிப்பதுமாக இருந்து வந்தார். ஆஞ்சநேயர் பூ பறிக்க மலர் வனம் புறப்படும்போது அவரைப் பிடிக்கலாம் என்று சனிபகவான் காத்துக் கொண்டிருந்தார். சனிபகவானின் எண்ணத்தை முன்னதாகவே தெரிந்து வைத்திருந்த அனுமன் சனிபகவானின் பிடியிலிருந்து தப்புவதற்கு உகந்த மார்க்கத்தைத் தெரிந்து வைத்திருந்தார். ஆஞ்சநேயர் திருமாளிகையின் மணிக்கதவைச் சற்று திறந்து தமது வாலை மட்டும் கொஞ்சம் வெளியே நீட்டினார். அவ்வளவு தான்! ஆஞ்சநேயரைப் பிடிக்க வெளியே நின்று கொண்டிருந்த சனிபகவான் இது தான் சமயம் என்று ஆஞ்சநேயர் வாலைக் கட்டியாகப் பிடித்துக் கொண்டார். சனி பகவானின் செயலைப் புரிந்து கொண்ட ஆஞ்சநேயர் முகம் மலர, சுவாமி! என்னை விட்டு விடுங்கள்! என்றார். அதற்கு சனிபகவான், ஆஞ்சநேயா! அது எப்படி முடியும்? 7 1/2 ஆண்டு காலம் உன்னை நான் பிடித்து ஆட்டிப் படைக்க வேண்டும் என்பது நியதியல்லவா? என்று கேட்டார். என் ராம ஜபத்துக்கும், பூஜைக்கும் உங்களால் ஊறு வரலாமா? ஈசுவர பட்டம் பெற்ற தேவரீர், ஈசுவர சொரூபமான இந்த எளியவனை விட்டு விலகுதல் தான் உசிதமானது; உத்தமமானது! என்றார் ஆஞ்சநேயர்! இல்லை ஆஞ்சநேயா! இது என்னால் முடியாது. நான் அந்த ஈசுவரனையே பிடித்துள்ளேன். பூவுலகில் வாசம் என்று வந்துவிட்டால் கிரகங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். இது ஜோதிடத்தின் தீர்ப்பு! எதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. எனக்கு என் ஸ்ரீராமச்சந்திர பிரபு தான் முக்கியம்! இதில் எவ்வித மாற்றமும் இல்லை! தங்கள் பிடியிலிருந்து எப்படி தப்புவது என்பது எனக்குத் தெரியும்! ஆஞ்சநேயர் ஆணித்தரமாகக் கூறினார். இவ்வாறு சனிபகவானிடம் தமது முடிவைத் திடமாகச் சொன்ன ஆஞ்சநேயர். ஆனந்தம் தாங்காமல் வாலை சுழற்றி, சுழற்றி துள்ளிக்குதித்து ராமநாம சங்கீர்த்தனத்தை பாடிக்கொண்டு, ஆடத்தொடங்கினார்.

ஆஞ்சநேயரின் வாலைப் பிடித்துக் கொண்டிருந்த சனி பகவான் வாலைப் பிடிக்கவும் முடியாமல் விடவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். வாலின் நுனியில் அமர்ந்திருந்த சனிபகவான் மிகுந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார். அவர் ஆஞ்சநேயரிடம், வாயு குமாரா! நீ எப்போது உனது பஜனையை நிறுத்தப் போகிறாய்? என்று கேட்டார். ஸ்ரீராம நாம சங்கீர்த்தனத்தை நிறுத்துவதா? நன்றாக கேட்டீர்களே ஒரு கேள்வி! சிரித்துக் கொண்டே சொன்னார் ஆஞ்சநேயர்! துள்ளிக் குதிக்கிறாயே! அதை எப்போது நிறுத்துவாய்? என்று கேட்டேன்? நீர் எம்மை எத்தனை ஆண்டுகள் பிடிப்பதாக உத்தேசம்? ஏழரை ஆண்டுகள். அப்படியானால் நானும் ஏழரை ஆண்டுகாலம் குதித்துக் கொண்டே இருப்பேன்! ஆஞ்சநேயரின் முடிவு சனிபகவானுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. சனி பகவான் தமக்குள் ஓர் முடிவிற்கு வந்தார். இவரை விட்டு விடுவோம் ! ஏழரை ஆண்டுகள் நான் பிடிப்பேன் என்ற அச்சத்தில் ஆஞ்சநேயர் இருக்கிறார்? இந்த பய உணர்வே நான் ஏழரை ஆண்டுகாலம் அவரைப் பிடித்ததற்குச் சமம்! என்று எண்ணியவராய் ஆஞ்சநேயர் வாலை விட்டு கீழே இறங்கினார் சனிபகவான்! ஆஞ்சநேயர் வாலை உள்ளே இழுத்துக் கொண்டு உள்ளிருந்த படியே, ச்ருதகர்மா! உனக்கு எனது வந்தனங்கள். என் ராமர் உன் ஈசுவரனைப் பூஜித்தவர். நானோ அந்த ஈசனின் சொரூபம்! நீயோ அந்த ஈசனால் சனிபகவான் என்ற பட்டத்தைப் பெற்றவன். அதுமட்டுமல்ல; உன் தந்தையான சூரிய பகவான் என் குருதேவர்! இப்படி நாம் இருவருமே அந்த ஈசுவரனின் அன்பிற்கு பாத்திரமானவர்கள் என்பதனை நீ உணர்வாய்! என்றார். ஆஞ்சநேயர் வெளியே வந்து, சனிபகவானை வணங்கினார். சனிபகவானும் ஆஞ்சநேயரை வணங்கி, ஆஞ்சநேயா! உன்னால் உன் பக்தர்களுக்கு ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் இப்படியொரு அற்புத திருவிளையாடலை அந்த ஈசனே நடத்தினார் போலும்! என்றார். ச்ருதகர்மா! எம்மைத் துதிப்போர்களை நீ எந்த வகையிலும் துன்புறுத்தலாகாது. அவர்களுக்கு நல்ல மேன்மைகளையும் சந்தோஷத்தையும் அளிக்க வேண்டும்! அப்படியே ஆகட்டும் ஆஞ்சநேயா! என்றார் சனிபகவான்! எல்லா சிவன் கோவில்களிலும் சனிபகவான் சன்னதி எதிரில் ஆஞ்சநேயர் சன்னதியைக் காணலாம். ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார். தம்மால் அவர்கட்கு எவ்வித கஷ்டமும் நேராமல் அருள் புரிவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
வடபழனி, ஆண்டவர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகளில், புற்றீசலாக முளைத்து வரும் பல வகையான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சிறப்புலி நாயனார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளிக்கும் போது இறைவன் ஆயிரத்தில் ஒருவராக ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை பிரம்மோற்சவத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar