Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ... ஜக்கம்மாள் கோவில் திருவிழா; மாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபாடு ஜக்கம்மாள் கோவில் திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்டும்ன்னார்கோவில் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
காட்டும்ன்னார்கோவில் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

24 மே
2023
10:05

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் திரவுபதி அம்மன் கோவிலில் திமிதி திருவிழா நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காட்டுமன்னார்கோவில் பெரியகுளம் கீழ்கரையில் பிரிசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தொடங்கி வைகாசி மாதம் வரை தீமிதி திருவிழா 25 நாட்கள் நடைபெறும், அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கி நடை பெற்று வருகிறது. விழாவை யொட்டி தினந்தோறும் பீஷ்மர் பிறப்பு, கர்ணன் பிறப்பு, தர்மராஜன் பிறப்பு, கிருஷ்ணன் பிறப்பு, கிருபச்சாரி பள்ளிக்கூடம், துரோணாச்சாரியார் பள்ளிக்கூடம், திரௌபதி பிறப்பு, திருக்கல்யாணம், அல்ல கல்யாணம், அர்ச்சுனன் தவசு, கர்ணன் மோட்சம், கிருஷ்ணர் உபதேசம், கூந்தல் முடிப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்கள் பால்காவடி, செடல் காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்து திரவுபதி அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர். முக்கிய விழாவான தீமிதி திருவிழா நேற்று மாலை கோவில் வளாகத்தில் நடந்தது. அப்போது பக்தர்கள் சக்தி கரகத்துடன் பெரியகுளம் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி, அம்மனை வழிபட்டனர். இதில் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar