கணவனும், மனைவியும் சேர்ந்து விரதமிருக்க, நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பர்
ஆரண்ய கெளரி விரதம்: அம்பிகையின் தெய்வீக சக்தி அனைத்திலும் கொலுவிருக்கிறது. காடு, மலை, மரங்கள், நதி என அனைத்து இயற்கை வடிவங்களையும் தெய்வீக சக்தியின் வெளிப்பாடாக எண்ணிப் பூஜிப்பது நம் பண்பாடு. அந்த வகையில், வன ரூபமாக காட்சிதரும் தேவியை பூஜிப்பதே "ஆரண்ய கெளரி விரதம் அல்லது வன கெளரிவிரதம். இந்த விரதமானது நாம் விரும்புகின்ற தெய்வ தரிசனத்தையும், திருமணம் வரத்தையும், நோய் நிவாரணத்தையும் நிறைவேற்றித் தரும்.
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் மகிழ்ச்சியுடன் நன்மையளிக்கும். வாழ்வில் எல்லா செல்வங்களும் உண்டாகும். மன்மதன் போல அழகுடன் திகழ்வர் என கந்தசஷ்டிகவசம் கூறுகிறது. சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். கணவனும், மனைவியும் சேர்ந்து சஷ்டி விரதமிருக்க, நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பர். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும்