ராமன் ஆட்சி செய்த போது, அயோத்தி மக்கள் முழு சுதந்திரத்துடன்நிம்மதியுடன் வாழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது. பாரதம் சுதந்திரம் பெற்றதும், மீண்டும் ராமராஜ்யம் அமையவேண்டும் என ராம பக்தரான காந்திஜி விரும்பினார். சாதாரணமானவர்கள்கூட, மன்னர் ராமனைப் பற்றி விமர்சிக்கும்விதத்தில் மக்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. மனிதன் மட்டுமில்லாமல், வாயில்லாதஜீவனான நாய் கூட ராமனிடம் நியாயம் கேட்டு வழக்காட வந்ததாக உத்தரகாண்டம் கூறுகிறது. இப்படியாக,“தனி ஒருவரின் பிரச்னை கூட ராஜாங்கத்தின் உச்ச ஸ்தானமான அரண்மனையில் தெரிவிக்கப்படுவது தான் ராமராஜ்யம். அதுவே உண்மையான ஜனநாயகம். அந்த நிலை மீண்டும் மலர, தியாக மூர்த்தியானராமபிரானே துணை நிற்க வேண்டும்” என்கிறார் காஞ்சிப்பெரியவர்.