பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தியில் உள்ளது சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவில். இங்கு பிரதிஷ்டா தின உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
காலை 6.30 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு பூர்ணாபிஷேகம், செண்டை மேளம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்புடன் "காழ்ச்சசீவேலி" ஆகியவை நடந்தன. தொடர்ந்து 12.30 மணிக்கு மூலவருக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்புடன் உற்சவர் தெருவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடந்தது. இரவு 9.30 மணிக்கு நாதஸ்வரத்துடன் உற்சவர் பல்லக்கில் தெரு வீதிகள் உலா வந்த நிகழ்வுடன் விழா நிறைவுபெற்றது.