பதிவு செய்த நாள்
29
மே
2023
04:05
அவனியாபுரம்: அவனியாபுரம் செம்பூரணி ரோடு அழகு முத்துமாரியம்மன் கோயிலில் 54ம் ஆண்டு வைகாசி பொங்கல் உற்ஸவ விழா மே 28ல் துவங்கியது. அன்று கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், மே 31ல் சக்தி கிடாய் வெட்டுதல், ஜூன் 1ல் அன்னதானம், ஜூன் 2ல் குத்துவிளக்கு பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் பாலமுருகன், முருகேசன், சிவமுருகன், பிச்சை பாண்டி, வெள்ளைச்சாமி, பெரியசாமி, துளசிராம் செய்து வருகின்றனர்.