பதிவு செய்த நாள்
30
மே
2023
01:05
அன்னூர்: அவிநாசி அருகே பொங்கலூரில் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஜூன், 1ம் தேதி நடக்கிறது. இங்குள்ள பொங்கலூர், பாப்பநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், தாசராபாளையம் உள்ளிட்ட நான்கு கிராமங்களின் கிராம தெய்வமாக உள்ள மாகாளியம்மன் கும்பாபிஷேக விழா ஜூன், 1ம் தேதி நடக்கிறது. விழாவை ஒட்டி நேற்று பவானி ஆற்றுக்கு சென்று, புனித நீர் எடுத்து வருதல் நடந்தது. நாளை முளைப்பாரி, அம்மனுக்கு வஸ்திரம், ஆபரணங்கள் கொண்டு வருதல், கணபதி பூஜை, யாகசாலை பிரவேசம், மண்டப அர்ச்சனை, மகா தீபாராதனை நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு அவிநாசி தீரன் கலை குழுவினரின் கம்பத்து ஆட்டம் நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு மாகாளியம்மன் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன், 1ம் தேதி மகாதீபாராதனை, கும்பமுர்த்திகள் ஆலயத்தை வலம் வருதல், மாகாளியம்மன் விமான கும்பாபிஷேகம், காலை, 8:45 மணிக்கு மாகாளியம்மன் மகா கும்பாபிஷேகம், தச தரிசனம், மகா அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.