திண்டிவனம் பச்சைவாழியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2023 03:05
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த பாங்கொளத்துார் ஸ்ரீமன்னாத சுவாமி சமேத பச்சைவாழி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இக்கோவிலில், பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து இரவு 7:30 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மதியம் 12:00 மணியளவில் வாழ்முனீஸ் வரருக்கு பாதபூஜை அபிேஷகமும், ஆராதனையும் நடந்தது. இரவு 9:00 மணிக்கு சக்திகரகம், அக்னிகரக நிகழ்ச்சி நடந்தது. இரவு சுப்ரமணிய சுவாமி வாணவேடிக்கையுடன் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான அக்னிமிதித்தல் இன்று 30ம் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உற்சவ கமிட்டியினர், கிராம மக்கள் செய்துள்ளனர்.