பதினெட்டாம் நூற்றாண்டு செப்பு பட்டயம் பழநியில் கண்டறியப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2023 10:05
பழநி: பழநியில் 18 ஆம் நூற்றாண்டு சேர்ந்த செப்பு பட்டயம் கண்டறியப்பட்டது.
பழநி முருகன் கோயில், 64 அயன் மிராசு பண்டாரங்கள் பாரம்பரியமாக ஆறுகால பூஜைக்கு தேவையான புனித நீரை நந்தவன பகுதியில் இருந்து பழநி முருகன் கோயிலுக்கு எடுத்துச் செல்வர். இங்கு சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகள் பழமையான செப்பு பட்டயம் ஒன்று இருந்தது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகையில்," தற்போது கண்டறியப்பட்டுள்ள செப்புப்பட்டயம், 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இதில் செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் பழநி முருகன் கோயிலில் சூரசம்கார மண்டகப்படிக்காக வழங்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு சண்முக வாத்தியார் பேரன், சுவடியில் எழுதி இருந்ததை செங்குந்த முதலியார் சமூகத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க தாமிரசாசன பட்டையமாக, நஞ்சய பண்டாரம் என்பவர் எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முன்புறம் விநாயகர், முருகர்,சூரியன், சந்திரன், நவவீரர்கள் சிலைகள், செங்குந்தம் எனும் வேல் அமைப்பு பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி மற்றும் கிரந்த மொழி என்னும் சமஸ்கிருத மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. ஆறு வரிகளில் எழுதப்பட்டுள்ளது. செப்பு பட்டயம் 1.7 கிலோ எடை உடையதாக உள்ளது 18 சென்டிமீட்டர் உயரமும் 55 சென்டிமீட்டர் நீளமும் உடைய இப்பட்டயம் தண்டபாணி சகாயம் என துவங்குகிறது. பழமையான தாமிர சாசன பட்டயம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் ஸ்தானீகமிராஸ் 64 திருமஞ்சன பண்டாரங்கள் சங்கத்தின் பாதுகாப்பில் உள்ளது." என்றார்.