கச்சிராயிருப்பில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2023 10:05
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பில் உள்ள அய்யனார், ஊர்க்காவலன், கொடிப்புலி கருப்புச்சாமி கோயிலில் புரவி எடுப்பு திருவிழா 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்.24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கிராமத்தினர் குலாலரிடம் (வேளார்) சாமி, குதிரை சிலைகள் செய்வதற்கான பிடி மண் கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இதையடுத்து நேற்று மாலை குலாலர் வீட்டிலிருந்து மேளதாளம், வானவேடிக்கையுடன் சாமி, குதிரை சிலைகளுக்கு கண் திறந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் சிலைகளை சுமந்து முக்கிய வீதிகளில் ஊர்வலம் சென்றனர். இதையடுத்து இன்று (மே.31)ல் சாமி, குதிரை சிலைகளை அய்யனார் , ஊர்க்காவலன், கொடிப்புலி கருப்புச்சாமி கோயில்களில் சிலைகளை கொண்டு சென்று பங்காளிகள் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும். நாட்டாண்மை, கட்டையன், வாரமிளகி கூட்ட விழா கமிட்டியினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.