பழநியில் புலிப்பாணி சுவாமிகளுக்கு வரவேற்பு; பிரதமர் மோடிக்கு புகழாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2023 01:05
பழநி: பழநி, போகர் ஆதீனம் புலிப்பாணி பாத்திர சுவாமிகள் இந்திய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொண்டு பழநி திரும்பினார் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பழநி, போகர் ஆதீனம், புலிப்பாணி ஆசிரமம் புலிப்பாணி பாத்திரசுவாமிகள் கடந்த மே 28 டெல்லியில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதில் பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு செங்கோல் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். அதன்பின் நேற்று மாலை பழநி ஆசிரமத்திற்கு திரும்பினார். இதை அறிந்த ஆசிரமவாசிகள் ஹிந்து அமைப்பினர் புலிப்பாணி பாத்திர சுவாமிகளுக்கு திரு ஆவினன்குடி கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். சன்னதி வீதியில் பல்வேறு தரப்பினர். பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். பாத விநாயகர் கோவில் முன் யானை மூலம் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு அமைப்பினர் வரவேற்றனர். அதன்பின் புலிப்பாணி ஆசிரமத்தில் புலிப்பாணி பாத்திரசுவாமிகள் பேசுகையில்,"பாரதப் பிரதமருக்கு செங்கோல் வழங்கிய நிகழ்வு மறக்க முடியாதது. பாராளுமன்றத்தில் திறப்பு விழாவில் செங்கோல் வழங்கிய போது மிக எளிமையான பிரதமராக, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். தனித்தனியாக அனைத்து சைவ ஆதீனங்களிடம் பிரதமர் ஆசி பெற்றார். இந்நிகழ்வில் செங்கோலை உருவாக்கிய நபரும் கலந்து கொண்டார். தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை கிடைத்தது. ஆதினங்கள் அனைவரும் மனம் குளிர்ந்தோம். பிரதமர் நீடூடி வாழ ஆசி வழங்கினோம். எங்களை மிகவும் மரியாதையாக நடத்தினர். பாராளுமன்றம் கலைநயமிக்க கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. பழநி மக்களின் பிரதிநிதியாக நான் கலந்து கொண்டேன். இந்த பெருமை அனைத்தும் இறைவனுக்கே சேரும். எங்களை பிரதமர் வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்தார். மிகுந்த பாதுகாப்பு ஏற்பாட்டின் போதும் எங்களுக்கு உரிய மரியாதை கிடைத்தது. மீண்டும் மீண்டும் மோடி அவர்கள் ஆட்சி அமைப்பார் என அனைவரும் கூறினர். நீதி தவறாத ஆட்சி நடைபெறும் செங்கோல் இருக்கும். சித்தர் பீடங்களை காக்க கோரிக்கை விடுத்துள்ளோம்." என்றார்.