தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி பெருவிழா; சமய பிரச்சார கூட்டம் தொடங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2023 01:05
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு சமய பிரச்சார கூட்டம் தொடங்கியது. 0 நாள் நடைபெறும் கூட்டத்தை தருமபுரம் ஆதீனகர்த்தர் தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் உள்ள 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் அமைந்துள்ள ஞானபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஞானபுரீஸ்வரர் கோயிலிலும், தருமபுரம் ஆதீன திருமடத்திலும் 10 நாட்கள் பல்வேறு உற்சவங்களும், நிகழ்வுகளும் நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக தருமபுரம் ஆதீன திருமடத்தில் சமயப் பிரச்சாரக் கூட்டம் இன்று தொடங்கியது. 10 நாள் நடைபெறும் இக்கூட்டத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி கூட்டத்தை தொடக்கி வைத்தார். இதில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சைவ சமய அடியார்கள், சிவனடியார்கள், தமிழறிஞர்கள் 150 பேர் கலந்து கொண்டனர்.