அப்பநாயக்கன்பட்டி அண்ணமார் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2023 01:05
சூலூர்: அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ அண்ணமார் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ அண்ணமார் சுவாமி கோவில் பழமையானது. இக்கோவிலில், வர்ணம் தீட்டுதல், புதிதாக சுவாமி விக்ரகங்கள் நிறுவுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. கருமத்தம்பட்டி சவுந்தர்ராஜ பட்டாச்சாரியார் தலைமையில், கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரண்டு கால ஹோமங்கள், பூர்ணாகுதி முடிந்து, ஸ்ரீ அண்ணமார் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. ஊராட்சி தலைவர் சாந்தி, ராஜேந்திரன், ஜெயக்குமார், தண்டபாணி, ஆறுமுகம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.