ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2023 12:06
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடந்தது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5:00 மணிக்குமேல் பிரம்ம முகூர்த்தத்தில் திருத்தேர்களுக்கு வைத்தியநாதசுவாமி, சிவகாமி அம்பாள் எழுந்தருளினர். திருத்தேரில் ரகு பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் காலை 8:30 மணிக்கு திருத்தேர்வடம் பிடித்து இழுக்கும் வைபவம் துவங்கியது. ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகள் சுற்றி வந்து காலை 9:55 மணிக்கு தேர் நிலையம் வந்து சேர்ந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜவகர், கோயில் பட்டர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.