மேலுார்: திருவாதவூர் திருமறைநாதர் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது, தேரில் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் மற்றும் பிரியாவிடையுடன் எழுந்தருளி கோயிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கிளாதிரி, திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து இழுந்தனர். நாளை (ஜூன் 2) இரவு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.