சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2023 01:06
சிங்கம்புணரி; சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோயில் ராஜகோபுரத்திற்க்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயில் கும்பாபிஷேகம் இன்று (ஜூன் 1ல்) நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள், கோயில் மண்டபத்தில் அனுச்ஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ரக்ஷாகின ஹோமம், பிரவேச பலி நடந்தது. பரம்பரை ஸ்தானிகம் சிவாச்சாரியார்கள் யாக பூஜைகளை நடத்தி வைத்தனர். இதைத் தொடர்ந்து புனித கலசங்கள் கோயில் உள்பிரகாரத்தை சுற்றி எடுத்து வரப்பட்டு ராஜகோபுரத்திற்க்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கிராம முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.