சூலூர்: பாப்பம்பட்டி பிரிவு புடவைக்காரி மகாலட்சுமி அம்மன் கோவிலில் ஆண்டு விழா நடந்தது. சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பிரிவு நொய்யல் ஆற்றங்கரையில் புடவைக்காரி மகாலட்சுமி, கருப்பராயன், கன்னிமார் கோவில் உள்ளது. இங்கு முதலாம் ஆண்டு விழா நடந்தது. புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு, சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து, புடவைக்காரி மகாலட்சுமி, கருப்பராயன் மற்றும் கன்னிமாருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டு விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.