வ.புதுப்பட்டி ராஜகணபதி கோயில் கும்பாபிஷேக விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2023 06:06
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா வ.புதுப்பட்டியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ராஜகணபதி கோயில் கும்பாபிஷேக விழா யாக பூஜைகளுடன் துவங்கியது. இதற்காக ஊரணி பிள்ளையார் கோயிலில் இருந்து புற்று மண் எடுத்து வரப்பட்டு யாகசாலையில் போடப்பட்டு யாக பூஜைகள், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. யாகசாலையில் அமைக்கப்பட்ட 7 யாக குண்டங்கள், 5 வேதியல்கள், 70 கும்பங்கள் அமைக்கப்பட்டு முதல், இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது. மாலையில் கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடாகக மருந்து சாத்துதல், எந்திர பிரதிஷ்டை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று (ஜூன் 1) காலை 7:35 மணிக்கு 8 சன்னதிகளுக்கான 8 விமான கலசங்களுக்கும், கோயிலுக்கு முன்பாக 5 கலசங்களுடன் அமைக்கப்பட்ட ராஜகோபுரத்திற்கும், கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வ.துப்பட்டி ராஜ மன்னரீக சத்திரிய கம்மவார் நாயுடு சமுதாய நிர்வாகிகள் செய்துள்ளனர்.