பண்ருட்டி; திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில, வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் 4 மாட வீதியை 16 முறை வலம் வருதலும், இரவு 7:00 மணியளவில் பெரியநாயகி உள்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, பதினாரு கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, நேற்று முன்தினம் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 8:30 மணியளவில் ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் மலை அடிவாரத்தை 16 முறை வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.