ஒருவர் பிறந்த நட்சத்திரத்தைப் பொறுத்து எல்லா கிரகங்களின் திசைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரவே செய்யும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. சனிதிசை வந்து விட்டாலே சிரமம் என்றும் கருத வேண்டாம். ஜீவன பலத்தையும்(தொழில்), ஆயுள் பலத்தையும் தரும் அதிகாரம் சனி ஒருவருக்கே உண்டு. நீதி, நியாயத்திற்கு கட்டுப்படும் இவருக்கு, தர்ம நெறியில் வாழ்பவர்கள் யாவரையும் பிடிக்கும்.சனீஸ்வரர் ஜாதகத்தில் சுபபலம் பெற்றிருந்தால் ஆயுள், ஆரோக்கியம், தொழில், செல்வ வளம், நல்ல பணியாளர்கள், மக்கள் செல்வாக்கு உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.