Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குளத்து நீரை காலி செய்ததால் இரும்பு ... சனிப்பிரதோஷம்; சிவனை வழிபட 1000 மடங்கு அதிக பலன் கிடைக்கும்! சனிப்பிரதோஷம்; சிவனை வழிபட 1000 மடங்கு ...
முதல் பக்கம் » துளிகள்
நோய் தீர்க்கும் மத்துாரம்மா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நோய் தீர்க்கும் மத்துாரம்மா

பதிவு செய்த நாள்

10 பிப்
2026
12:02

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது ஹூஸ்கூர் கிராமம். இங்கு சோழர் காலத்தில் கட்டப்பட்ட, ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான மத்துாரம்மா கோவில் உள்ளது. கிராம தேவதையான மத்துாரம்மா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவிலில், ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரலில் கொண்டாடப்படும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.


கருவறையில் சிக்கம்மா, தொட்டம்மா என்று இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன. திருவிழாவின் போது, 120 அடி உயரமுடைய தேர், வீதிகளில் உலா வரும். இந்த தேரின் மீது வாழைப்பழத்தில் நாம் மனதில் நினைப்பதை எழுதி வீசினால் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தொற்றுநோயால் பாதிக்கப்படுவோர், கோவிலில் வந்து அம்மனை தரிசித்து சென்றால், நோய் வேகமாக குணம் அடையும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இந்த கோவிலுக்கு எலக்ட்ரானிக் சிட்டி, சர்ஜாபூர், ஓசூரில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.


கோவில் நடை தினமும், காலை, 5:30 முதல் இரவு, 8:30 மணி வரை திறந்திருக்கும்.


கோவில் முன் வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளது.


மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து ஹூஸ்கூருக்கு நேரடி பஸ் சேவை உள்ளது. பஸ் நம்பர் 349 சி.


ரயிலில் சென்றால் ஓசூர் செல்லும் மெமு ரயிலில் சென்று, ஹீலலிகேவில் இறங்கி அங்கிருந்து செல்லலாம்; மெட்ரோ ரயிலில் சென்றால் ஹெப்பகோடி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 
temple news
* நல்லதைச் செய். உனக்கு நல்லதே நடக்கும். * அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே. வாழ்நாள் முழுவதும் படி.  * ... மேலும்
 
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar