கம்ஹாசுரன் என்னும் அசுரன் தேவர்களைத் துன்புறுத்த அவர்கள் பார்வதியின் உதவியை நாடினர். ஆவேசப்பட்ட பார்வதி உக்கிர கோலத்தில் போர் புரிய புறப்பட்டாள். அதையறிந்த அசுரன் சிவனைச் சரணடைந்து தவத்தில் ஆழ்ந்தான். வரம் ஏதும் கேட்க முடியாமல் அசுரன் ஊமையாகும்படிச் சபித்தாள் பார்வதி. அதனால் ‘மூகாசுரன்’ எனப்பட்டான். ‘மூகன்’ என்பதற்கு ‘ஊமை’ என்பது பொருள். மூர்க்க குணத்துடன் திரிந்த அசுரனைக் கொன்று ‘மூகாம்பிகை’ என பெயர் பெற்றாள். கர்நாடக மாநிலம் கொல்லுாரில் மூகாம்பிகை கோயில் உள்ளது. இங்கு பஞ்சலோக சிலையை பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரர், ‘சவுந்தர்யலஹரி’ என்னும் பாடலையும் பாடினார்.