பதிவு செய்த நாள்
05
ஜூன்
2023
04:06
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி காளியம்மன், பகவதி அம்மன் கோவில்களில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். விழாவையொட்டி ஜீன் 3 கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், தீர்த்தம், முனைப்பாரி அழைத்து வந்து யாகசாலையில் விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, மஹா சங்கல்பம், வேதபாராயணம், மூலிகை நாள் யாகம், யந்திரஸ்தாபனம், மருந்து சாற்றுதல் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று விஸ்வசேன வழிபாடு, மஹா சங்கல்பம், வேதபாராயணம், நாடி சந்தானம்,மூலிகை நாள் யாகம், பூர்ணாஹுதி, தீப ஆராதனை உள்ளிட்ட இரண்டு கால யாகவேள்வி பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடு பின் சிவாச்சாரியார்கள் வேதம் மந்திரம் முழங்க கும்பங்களில் புனித நீர் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.