பதிவு செய்த நாள்
06
ஜூன்
2023
03:06
அவிநாசி: ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தமிழக அரசின் திருமணத்திட்டத்திற்கு பதிவு செய்ய அழைப்பு.
தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் 2023-24ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் படியும் ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி ரூ 50,000 திட்டச் செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில், அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோவில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த திருமண திட்டத்தில், மணமக்களுக்கு தங்கத்தில் திருமாங்கல்யம் 4 கிராம், மணமகன்,மணமகள் ஆடை, திருமணத்திற்கு இரு வீட்டாரிலிருந்து 20 நபர்களுக்கு விருந்து,மெத்தை,மாலை, பீரோ, கட்டில், தலையணை, பாய், கை கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவை ரூ 50.000 மதிப்பில் மணமக்களுக்கு இத்திட்டத்தின் மூலம் தரப்படுகின்றது. இதற்கான தகுதி வாய்ந்த நபர்கள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள ஹிந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறும், மேலும் விவரங்களுக்கு கோவில் செயல் அலுவலரை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.