Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீராமர் வழிபட்ட உப்பூர் ... வேலாங்குளம் லட்சுமி நாராயணர் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் வேலாங்குளம் லட்சுமி நாராயணர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2023
02:06

பேரூர்: பச்சாபாளையத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

பச்சாபாளையம், ராம்ஜி ஹில் வியூவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, இறை அனுமதி பெறுதல், கலச பூஜை, மஹா கணபதி ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், நவகிரக சாந்தி, வாஸ்து பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. அதன் பின் புதிய விக்கிரகங்களுக்கு அபிஷேகம், சுவாமிகளுக்கு கண் திறப்பு நடந்தது. மாலையில் முளைப்பாரி, சீர் தட்டுகள் மற்றும் தீர்த்த குடங்கள் ஊர்வலம் நடந்தது. இரவு, முதல் காலை யாக பூஜை நடந்தது. இன்று அதிகாலை, 6:00 மணிக்கு, மங்கல இசை, திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 9:20 மணிக்கு, யாகசாலையில் இருந்து கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. காலை, 9:30 மணிக்கு, பிரசன்ன வெங்கடேஷ் சுவாமிகள் தலைமையில், விமான கோபுரத்திற்கும், செல்வ விநாயகருக்கும், மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, செல்வ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. இதில், ராம்ஜி ஹில் வியூ உரிமையாளர் ராம்ஜி, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பிரசாத், தர்மராஜா அருள் பீடம் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராம்ஜி ஹில் வியூ குடும்பத்தார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar