கிருஷ்ணாபுரம் சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2023 05:06
சோமனூர்: சோமனூர் கிருஷ்ணாபுரம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. சோமனூர் அடுத்த கிருஷ்ணாபுரம் சித்தி விநாயகர் கோவில் பழமையானது. இங்கு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேக விழா, கடந்த 6 ம்தேதி காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மதியம், பவர் ஹவுஸ் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து, முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மாலை முதல் கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. நேற்று இரு கால ஹோமங்கள் நடந்தன. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் எடுத்து வரப்பட்டன. அவிநாசி அருள் நத்தி சிவாச்சாரியார் தலைமையில் 6:00 மணிக்கு, சித்தி விநாயகர், அரசமரத்தடி விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. வேலவன் காவடி குழுவினரின் காவடியாட்டம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.