பதிவு செய்த நாள்
09
ஜூன்
2023
03:06
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி மாரியம்மன் கோயில் தெரு, காந்தி நகர் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை 10:10 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜூன் 7ல் சிவாச்சாரியார் மணிகண்டன் தலைமையில் விக்னேஸ்வரர், விநாயகர் பூஜையுடன், யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து நேற்று காலை விக்னேஸ்வரர், கோ பூஜை மற்றும் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, காலை 10:00 மணிக்கு கடம் புறம்பாடு நடைபெற்றது. கருட பகவான் கோவில் கோபுரத்தை வட்டம் அடித்து பக்தர்களுக்கு காட்சியளித்ததை தொடர்ந்து, காலை 10:10 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கிராமத் தலைவர் தமிழ் கண்ணன், துணைத் தலைவர் தமிழ் காளி, செயலாளர் ஆதிரைமன்னா, ஐயப்ப குருசாமிகள் கோட்டைலிங்கம், ராமகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருப்பாலைக்குடி மீனவ பட்டங்கட்டிய சமூகத்தாரும், ஐயப்ப சுவாமி குருமார்களும் செய்திருந்தனர்.