பதிவு செய்த நாள்
09
ஜூன்
2023
03:06
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலின் உபகோயிலான மகேந்திரகிரி நாதர் (சிவன்), கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு மற்றும் தமிழக அரசு அனுமதியோடு நெல்லை மாவட்டம் அழகிய நம்பிராயர் கோயிலில் கால பைரவர் சன்னதியையொட்டி புதிதாக மகேந்திரகிரி நாதர் (சிவன்) கோயில் க கட்டுமானப்பணிகள் மற்றும் கால பைரவர் சன்னதியில் புனரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. பணிகள் முழுதும் நிறைவடைந்தடைந்ததையடுத்து, கடந்த மாதம் பாலாலயம் நடந்தது. இதையடுத்து கடந்த 6ம் தேதி யாகசாலைலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா கோலாகலமாக துவங்கியது. 3ம் நாளான நேற்று அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜை மற்றும் பல்வேறு ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து யாகசாலையில் இருந்து க கடம் புறப்பாடு, தொடர்ந்து புனிதநீர்அடங்கிய குடங்களுடன் சிவாச்சாரியார்கள் கோயில் பிரகாரங்களில் சுற்றி வந்தனர். அதன் பின்பு ராமானுஜ ஜீயர் ஆசியுடன் விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்குறுங்குடி டவுன்.பஞ்., தலைவர் இசக்கித்தாய் ஞான சேகர், சீனிவாசன் சேவைகள்அறக்கட்டளை (டி.வி.எஸ்) அலுவலர்கள், பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த சிவனடியார்கள், அறக்கட்டளை களப்பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜன்ட் பரமசிவன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.