பதிவு செய்த நாள்
09
ஜூன்
2023
03:06
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மகாமண்டபம் கட்டுமான பணியினை தேவஸ்தான போர்டு தலைவர் சேகர்ரெட்டி துவக்கி வைத்தார்.
உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் அருகே திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூபாய். 1.50 கோடி மதிப்பீட்டில் மகாமண்டபம் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்போது திருவதிகை சரநாராயண கோவில் ராமபட்டாச்சாராரியர் தலைமையில் லட்சுமி நரசிம்மசுதர்சன ஹோமம் வளர்க்கப்பட்டு பூமி பூஜை நடந்தது. விழாவிற்கு தேவஸ்தான போர்டு தலைவர் சேகர்ரெட்டி தலைமை தாங்கி கட்டுமான பணியை தூக்கி வைத்தார். அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், தேவஸ்தான போர்டு அறங்காவலர் முன்னாள் உறுப்பினருமான குமரகுரு, முன்னாள் ஒன்றிய சேர்மன் மயில்மணி குமரகுரு ஆகியோர் வரவேற்றனர். மகாமண்டபம் கட்டுவதற்கான பணியை மேற்கொண்டுள்ள கடலூர் ஆர்.ஜி., கன்ஸ்ட்ரக்சன் நாராயணசாமி, ஞானச்சந்திரன், ஸ்ரீ விநாயகா கல்வி குழும தலைவர் நமச்சிவாயம், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், ம.தி.மு.க.. மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தி.மு.க., அவை தலைவர் சிவராஜ், அ.தி.மு.க.. ஒன்றிய செயலாளர் மணிராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் சம்பத்ஐயர், ஜெ.,பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாணவரணி மாவட்ட செயலாளர் பாக்கியராஜ், ஐ.டி.விங். மாவட்ட செயலாளர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக பிரிவு தலைவர் இலரவி, முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் ராமசாமி, நகர துணை செயலாளர் கோபால், வழக்கறிஞர்கள் அன்பழகன், ராஜகோபால், பத்திரிசாமி, திலீப், சுரேஷ், ஒப்பந்ததாரர் ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.