கருமத்தம்பட்டி: குளத்துப்பாளையம் கருப்பராயன், கன்னிமார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கருமத்தம்பட்டி அடுத்த குளத்துப்பாளையம் கவுசிகா நதியை ஒட்டி உள்ளது கருப்பராயன், கன்னிமார் மற்றும் தன்னாசியப்பன் கோவில். இங்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. கடந்த, 7 ம்தேதி குளத்துப்பாளையம் சிவன் கோவிலில் இருந்து தீர்த்தக் குடம், முளைப்பாரி எடுத்து வரப்பட்டு கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை முதல்கால ஹோமம் பூர்ணாகுதி நடந்தது. இரவு, சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. இன்று காலை இரண்டாம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து புனித நீர் கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. 8:00 மணிக்கு விநாயகர், கருப்பராயன், கன்னிமார், தன்னாசியப்பன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் நடந்தது. மேனாங்குல சமுதாய மக்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.