குத்துக்கல்வலசை வழிவிடு விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2023 04:06
திருப்புல்லாணி: களிமண் குண்டு ஊராட்சி குத்துக்கல்வலசை கிராமத்தில் உள்ள வழிவிடு விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த ஜூன் 8 அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. இன்று காலை 6:30 மணியளவில் சூரிய பூஜை இரண்டாம் காலயாகசாலை பூஜை நிறைவிற்கு பின்னர் காலை 10:00 மணி அளவில் வழிவிடு விநாயகர் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குத்துக்கல்வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.