மானாமதுரை மயூரநாத முருகப்பெருமான், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோவிலில் வருடாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2023 17:20
மானாமதுரை: மானாமதுரை மயூரநாத முருகப்பெருமான், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோவிலில் வருடாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை அருகே அலங்காரகுளம் வடகரையில் அமைந்துள்ள மயூரநாதர் முருகப்பெருமான், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு யாகம் வளர்க்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அர்ச்சகர் நாகமணி உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடத்தினார். இதனை தொடர்ந்து குருபூஜை விழாவும்,மகேஸ்வர பூஜையும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.