எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் இன்று கோயில் எழுந்தருளல்; விடிய, விடிய வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2023 05:06
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழாவில், இன்று பெருமாள் கோயிலுக்கு திரும்பும் நிலையில் விடிய, விடிய வீதி உலா வந்தார். இக்கோயிலில் 116 ஆவது ஆண்டு வைகாசி பவுர்ணமி வசந்த உற்சவ விழா ஜூன் 3 தொடங்கி நடக்கிறது. ஜூன் 4 அதிகாலை பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்கினார். தொடர்ந்து குதிரை வாகனம், சேஷ, கருட, ஹனுமன் வாகனங்களில் வைகை ஆற்றில் அவதார சேவைகளில் அருள்பாலித்தார். நேற்று இரவு 7:00 மணிக்கு பெருமாள் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்தில், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் பூ பல்லக்கில் அருள் பாலித்தார். தொடர்ந்து இரவு 11:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து புறப்பட்டு, எமனேஸ்வரம் முக்கிய வீதிகளில் விடிய, விடிய வலம் வந்தார். இன்று(ஜூன் 9) காலை 9:00 மணிக்கு பெருமாள் திருக்கோயிலை அடைகிறார். பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடந்து, இரவு கண்ணாடி சேவையில் அருள் பாலிக்க உள்ளார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.