நெய்க்காரபட்டி: பழநி, நெய்க்காரபட்டி அருகே வேலூர் மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழாவில் 1008 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. பழநி, நெய்க்காரப்பட்டி பேரூராட்சி, கே.வேலூர் மண்டு காளியம்மன் கோயில், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா மே.23., அன்று சாமி சாட்டுதலுடன் துவங்கியது. ஜூன் 6ல் சண்முக நதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, தீர்த்தம் எடுத்து வந்தனர். ஜூன் 7ல் அதிகாலை பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். நேற்று (ஜூன் 9) 1008 பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு அலங்காரம் செய்து, விளக்கேற்றி பூஜை நடைபெற்றது. கோயில் நிர்வாக த்தினர் ஏற்பாடுகளை செய்தனர். போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.