சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
இக்கிராமத்தில் உள்ள படைத்தலைவி அம்மன் கோயில் அம்மன் எடுப்பு மற்றும் கருக்குமடை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா ஜூன் 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 8 ம் நாளான நேற்று காலை படைத்தலைவி அம்மன் கோயில் முன்பாக அம்மன் எழுந்தருளினார். பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு செய்தனர். மாலை 6:30 மணிக்கு புரவி எடுப்பு நடந்தது. 2 அரண்மனை புரவிகள் உள்ளிட்ட 13 புரவிகள் புரவி பொட்டலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு புரவி நாடகம் பார்க்கும் வைபவம் நடந்தது. இரவு பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு வழிபாடு செய்தனர். இன்று மாலை புரவி பொட்டலில் இருந்து கருக்கு மடை ஐயனார் கோயிலுக்கு புரவிகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகின்றன.