சீதையுடன் காட்டுக்குச் சென்ற ராமர் ஓடக்காரனான குகனிடம், கங்கையைக் கடக்க உதவும்படி வேண்டினார். ராமர் மீது பக்தி கொண்ட குகன் “தங்களின் பாதத்துாசு பட்டதும் கல்லும் அழகிய பெண்ணாக மாறியது. அதுபோல என் படகும் பெண்ணாகி விட்டால் பிழைப்புக்கு என்ன செய்வேன்?” எனக் கேட்டான். ராமரின் பாதத்தில் சிறுதுாசு கூட இல்லாமல் கங்கை நீரால் கழுவும்படி வேண்டினான். ராமரும் அதன்படியே கால்களைக் கழுவி விட்டு படகில் ஏறினார். ‘மொல்லா’ என்னும் பெண் புலவர் பாடிய தெலுங்கு ராமாயணத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்து. ‛மொல்லா’ என்றால் ‘முல்லைப்பூ’. கிருஷ்ண தேவராயரின் அவையில் அரங்கேறிய நுால் இது.